பதுக்கி வைத்திருந்த 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


பதுக்கி வைத்திருந்த 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 13 July 2023 12:29 AM IST (Updated: 14 July 2023 4:33 PM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளி அருகே பதுக்கி வைத்திருந்த 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அருகே ரேஷன் அரிசியை ரெயில் மூலம் வெளிமாநிலத்திற்கு கடத்துவதாக நாட்டறம்பள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் நாட்டறம்பள்ளியை அடுத்த ஜங்கலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் போலீசாரை கண்டதும் மோட்டார்சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

அதைத்தொடர்ந்து அந்தப்பகுதியில் சோதனை செய்தபோது அங்குள்ள ஒரு வீட்டின் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 20 மூட்டைகளில் இருந்த 500 கிலோ ரேஷன் அரிசியையும், மோட்டார்சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் தப்பி ஓடியவர்கள் நாட்டறம்பள்ளி அருகே உள்ள ஏரிக்கோடி பகுதியைச் சேர்ந்த சூரியா, சந்தோஷ், சின்னராசு என்பது தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story