தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி


தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி
x

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 5,329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

"500 மதுக்கடைகளை இறுதி செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும். டாஸ்மாக் மதுபான கடைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பாதுகாப்புக்காக டாஸ்மாக் மதுபான கடைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும்" என்றும் தெரிவித்தார்.


Next Story