அறுவடைக்கு தயாரான 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன


அறுவடைக்கு தயாரான 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன
x

திருவையாறு பகுதியில் வீசிய சூறாவளி காற்றால், அறுவடைக்கு தயாரான 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்

திருவையாறு பகுதியில் வீசிய சூறாவளி காற்றால், அறுவடைக்கு தயாரான 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சூறாவளி காற்று

தஞ்சாவூர் மாவட்டத்தில், காவிரி சமவெளி பகுதிகளில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் நேற்று முன் தினம் வீசிய சூறாவளி காற்றால், வடுகக்குடி, ஆசனூர், மரூர் உள்ளிட்ட பகுதிகளில், இருபது நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த, சுமார் 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் தார்பிடித்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இழப்பீடு வழங்க வேண்டும்

இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில்,

நெல்லுக்கு 1 சதவீதம் பயிர் இன்சூரன்ஸ் தொகைக்கு, 'பிரீமியம்' செலுத்துவது போல, வாழைக்கு விவசாயிகள் 6 சதவீதம் பிரீமியம் செலுத்துகின்றனர்.ஆனால், தோட்டக்கலை துறையினர் பேரிடர் அல்லது 50 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு இருந்தால் மட்டுமே கணக்கெடுப்பு செய்து, இன்சூரன்ஸ் தொகை வழங்குகின்றனர். மழை, காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால், தோட்டக்கலை துறையினர் இழப்பீடு வழங்குவது குறித்து கண்டுகொள்வதில்லை. சூறாவளியால் பாதிக்கப்பட்ட வாழை மரங்களுக்கு, தோட்டக்கலை துறையினர் எந்த காரணமும் கூறாமல், இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story