கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்


கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்
x

கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேலூர்

அகில இந்திய கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்கள் நல சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் வேலூரில் உள்ள சங்க தலைமை அலுவலகத்தில் நடந்தது. பொருளாளர் சாய்குமார், மண்டல செயலாளர்கள் பாலு, ராஜலட்சுமி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். கூட்டத்துக்கு சங்க நிறுவன தலைவர் ஆர்.டி.பழனி கலந்து கொண்டு சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

கூட்டத்தில், தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்று 60 வயது பூர்த்தி அடைந்த தொழிலாளர்களுக்கு தற்போது ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. விலைவாசி உயர்வு காரணமாக மாதந்தோறும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் அல்லது ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டுமானத்துக்கு தேவையான மணல், சிமெண்டு, இரும்பு கம்பி, ஜல்லி, செங்கல் போன்ற பொருட்களின் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும். நலவாரியங்களில் பதிவு செய்த கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் சிறப்பு போனசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநில, மாவட்ட, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க மாநில செயலாளர் உமாசங்கர் நன்றி கூறினார்.


Next Story