862 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.50.54 கோடி கடன் உதவி-கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்


862 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.50.54 கோடி கடன் உதவி-கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில், 862 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.50.54 கோடி கடனுதவியை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில், 862 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.50.54 கோடி கடனுதவியை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.

கடனுதவி

தமிழக முதல்-அமைச்சர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் கடன் உதவிகளை நேற்று தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தென்காசி ஐ.சி.ஐ. அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நேற்று தென்காசி மாவட்டத்தில் உள்ள சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கி கடனுதவி வழங்கினார். தனுஷ்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார்.

ரூ.50.54 கோடி

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 541 ஊரக மகளிர் சுய உதவி குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு தொகை ரூ.38.02 கோடி மதிப்பீட்டிலும், 125 நகர்ப்புற மகளிர் சுய உதவி குழுக்கான தொகை ரூ.11.03 கோடி மதிப்பீட்டிலும், 163 குழுக்களுக்கான சமுதாய முதலீட்டு நிதி மூலம் ரூ.1.07 கோடி மதிப்பிலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 13 குழுக்களுக்கு இணை மானியம் தொகை ரூ.29 லட்சம் மதிப்பிலும், 8 குழுக்களுக்கு சமுதாயத் திறன் பள்ளிகள் அமைப்பதற்கான நிதி ரூ.5 லட்சம் மதிப்பிலும், 12 குழுக்களுக்கு சமுதாய பண்ணை பள்ளிகள் அமைக்க ரூ.8 லட்சம் மதிப்பிலும் ஆக மொத்தம் 862 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.50.54 கோடி மதிப்பிலான வங்கி கடன் உதவி வழங்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) குருநாதன், மாவட்ட தொழில் மைய மேலாளர் மாரியம்மாள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஷ்ணுவர்தன், பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் ஷேக் அப்துல்லா (தென்காசி), சுப்பம்மாள் (கடையநல்லூர்), காவேரி சீனித்துரை (கீழப்பாவூர்) மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Next Story