5,070 முஸ்லிம் குடும்பங்களுக்கு பிரியாணிக்கு தேவையான பொருட்கள்
வேலூர் மாநகர தி.மு.க. சார்பில் 5,070 முஸ்லிம் குடும்பங்களுக்கு பிரியாணிக்கு தேவையான பொருட்களை டி.எம். கதிர்ஆனந்த் எம்.பி. வழங்கினார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் ரம்ஜான் பண்டிகையையொட்டி 8-வது ஆண்டாக முஸ்லிம்களுக்கு பிரியாணிக்கு தேவையான பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் வேலூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி தலைமை தாங்கினார். மேயர் சுஜாதா, மண்டலக்குழு தலைவர்கள் நரேந்திரன், யூசுப்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி. கலந்து கொண்டு 5,070 முஸ்லிம் குடும்பங்களுக்கு பிரியாணிக்கு தேவையான அரிசி, எண்ணெய், வெங்காயம், பூண்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பை மற்றும் ரூ.200 ரொக்கம் ஆகியவற்றை வழங்கினார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய், பகுதி செயலாளர்கள் சுந்தர விஜி, தயாள் ராஜ், கணேஷ்சங்கர், பாலமுரளி கிருஷ்ணா, ஆர்.பி.இ. சசி, கவுன்சிலர் முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.