510 மாணவ-மாணவிகள் மாநில போட்டிக்கு தேர்வு


510 மாணவ-மாணவிகள்  மாநில போட்டிக்கு தேர்வு
x
திருப்பூர்

510 மாணவ-மாணவிகள்

மாநில போட்டிக்கு தேர்வு510 மாணவ-மாணவிகள்

மாநில போட்டிக்கு தேர்வு

திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது. 419 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். பள்ளி அளவில், வட்டார அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட அளவில் நடந்த போட்டியில் 6 ஆயிரத்து 424 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இவர்களில் 510 பேர் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று காலை திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 510 மாணவ-மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.


Next Story