கேரளாவுக்கு கடத்த முயன்ற 525 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 525 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி
புதுக்கடை,
புதுக்கடை தனிப்பிரிவு ஏட்டு ரமேஷ் மற்றும் போலீசார் அம்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தபோது பிளாஸ்டிக் கேன்களில் 350 லிட்டர் மானிய விலை மண்எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த மண்எண்ணெய் கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மண்எண்ணெய்யுடன், காரை பறிமுதல் செய்தனர்.
இதுபோல் பார்த்திபபுரம் பகுதியில் ஆட்டோவில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 175 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தூத்தூரை சேர்ந்த ஆண்டனி சேவியர் (வயது41), கேரள மாநிலத்தை சேர்ந்த அவுசேப்பு (31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணையும், வாகனங்களும் கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story