பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 526 திருவிளக்கு பூஜை
சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 526 திருவிளக்கு பூஜை நடந்தது.
தென்காசி
சிவகிரி:
சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. 6-ம் திருநாளான நேற்று காலை 6 மணிக்கு பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் அமர்ந்து வலம் வரும் காட்சியும், 11 மணிக்கு சிவகிரி பஸ்நிலையம் அருகே 7-ம் திருநாள் மண்டகப்படி சந்திப்பு பகுதியில் ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் முத்துக்குமாரசாமி மயில் வாகனத்திலும், மீனாட்சி அம்மன் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இரவு 7 மணிக்கு சேனைத்தலைவர் மண்டபத்தில் 526 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
Related Tags :
Next Story