தமிழகத்தில் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
தமிழகத்தில் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை,
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 528 பேர் கொரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர். இதில் 258 ஆண்கள் மற்றும் 270 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக சென்னையில் 108 பேருக்கும்,கோவையில் 54 பேருக்கும், கன்னியாகுமரியில் 30 பேருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணிகள் 4 பேர் உள்பட மொத்தம் 37 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 492 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 660 ஆக உள்ளது. இந்த நிலையில் இன்று 2 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
Next Story