53 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்


53 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்
x

அருப்புக்கோட்டை அருகே 53 மூைட ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்

விருதுநகர் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அருப்புக்கோட்டை அருகே சேதுராஜபுரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் 30 கிலோ கொண்ட 53 மூடை ரேஷன் அரிசி இருந்தது. அதில் மொத்தம் 1,590 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. வேனுடன் ரேஷன் அரிசி மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து வேனை ஒட்டி வந்த வேன் உரிமையாளர் விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த கணேஷ் குமார் (வயது 21) என்பவரிடம் விசாரித்த போது ரேஷன் அரிசி மூடைகள் மதுரை கீரைத்துறையை சேர்ந்த ஸ்ரீதேவி என்பவருக்கு சொந்தமானது என தெரிவித்தார். இதுகுறித்து கணேஷ்குமார், ஸ்ரீதேவி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேஷ்குமாரை கைது செய்தனர். ஸ்ரீதேவியை தேடி வருகின்றனர். இந்த ரேஷன் அரிசியை பந்தல்குடி பகுதியில் சேகரித்ததாகவும், மாட்டு தீவனத்திற்கு அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு செல்வதாகவும் கணேஷ்குமார் போலீசாரிடம் தெரிவித்தார்.



Next Story