537 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
ராஜபாளையம் அருகே 537 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே 537 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புகையிைல பொருட்கள்
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக சேத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சேத்தூர் மாலையம்மன் கோவில் தெரு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்ேபாது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஆட்டோவை சோதனை செய்தனர். அந்த ஆட்டோவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 2 மூடைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆட்டோ பறிமுதல்
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது ஆட்டோ டிரைவர் எக்கலாத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருண் (வயது 25) என்பதும், ஆதிபுத்திரங் கொண்ட அய்யனார் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தனியார் கிடங்கில் புகையிலை பொருட்கள் மொத்தமாக வைக்கப்பட்டு விருதுநகர் மற்றும் அருகே உள்ள தென்காசி மாவட்டங்களை சேர்ந்த பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அருணை போலீசார் கைது செய்தனர். பின்னர் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 537 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தி வந்த ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரை ேபாலீசார் தேடி வருகின்றனர்.