54-வது நினைவு தினம்: அண்ணா உருவ சிலைக்கு தி.மு.க.-அ.தி.மு.க.வினர் மரியாதை


54-வது நினைவு தினத்தையொட்டி சேலத்தில் அண்ணா உருவ சிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சேலம்

தி.மு.க.

முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 54-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் பெரியார் சிலையில் இருந்து அந்த கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர். பின்னர் அவர்கள் பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை வரை நடந்து சென்றனர். பின்னர் அவர்கள், அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில், மத்திய மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், மண்டலக்குழு தலைவர்கள் அசோகன், கலையமுதன், பொதுக்குழு உறுப்பினர்கள் நாசர்கான், வக்கீல் எஸ்.ஆர்.அண்ணாமலை, கவுன்சிலர்கள் ஜெயக்குமார், பன்னீர்செல்வம், வசந்தா மயில்வேல், கனிமொழி, மஞ்சுளா, சங்கீதா நீதிவர்மன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.

இதேபோல், சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜ், ரவிச்சந்திரன், சக்திவேல், முன்னாள் மேயர் சவுண்டப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜான்கென்னடி, முன்னாள் மண்டலக்குழு தலைவர் மோகன், பகுதி செயலாளர்கள் யாதவமூர்த்தி, முருகன், சரவணன் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மாவட்ட செயலாளர் தினேஷ் தலைமையில் சேலத்தில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story