55 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


55 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

வேலூரில் 55 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்

வேலூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவிபொறியாளர் சவுந்தர்யா, மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி ஆகியோர் தலைமையில் வேலூர் சத்துவாச்சாரி, வள்ளலார் பகுதியில் உள்ள மளிகை, பழக்கடை, பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகிறதா என்று சோதனையிட்டனர். அப்போது 13 கடைகளில் இருந்து 55 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடைகளுக்கு ரூ.13,200 அபராதம் விதிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடை உரிமையாளர்களை, மாசு கட்டுப்பாடு வாரிய மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் எச்சரித்தனர்.


Next Story