மேல்ஆலத்தூரில் 55.2 மில்லி மீட்டர் மழை


மேல்ஆலத்தூரில் 55.2 மில்லி மீட்டர் மழை
x

மேல்ஆலத்தூரில் 55.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.

வேலூர்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. வேலூர், காட்பாடி, மேல்ஆலத்தூர், குடியாத்தம் உள்ளிட்ட இடங்களில் இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் கொணவட்டம் பகுதியில் சென்னை-பெங்களூரு அணுகுசாலையில் மழைநீர் தேங்கி நின்றது. அதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்ல சிரமம் அடைந்தனர். அதேபோன்று தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது.

வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக மேல்ஆலத்தூரில் 55.2 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

காட்பாடி-22, குடியாத்தம்-19, வேலூர்-15.6, வேலூர் சர்க்கரை ஆலை -2.4.


Next Story