ஊரக உள்ளாட்சிக்கான மானியத்தின் முதல் தவணை மத்திய அரசு ரூ.552.20 கோடி நிதி விடுவிப்பு: தமிழக அரசு தகவல்
15-வது நிதிக் குழுவின் பரிந்துரையின் பேரில் மத்திய நிதி அமைச்சகத்தின் செலவீனங்கள் துறை, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடிப்படை மானியத்தின் முதல் தவணையாக ரூ.552.20 கோடி நிதியை விடுவித்துள்ளது.
சென்னை,
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பி.அமுதா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
15-வது நிதிக் குழுவின் பரிந்துரையின் பேரில் மத்திய நிதி அமைச்சகத்தின் செலவீனங்கள் துறை, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடிப்படை மானியத்தின் முதல் தவணையாக ரூ.552.20 கோடி நிதியை விடுவித்துள்ளது.
இந்தத் தொகை 2022-23-ம் ஆண்டுக்கான ஒதுக்கீடாகும். இந்தத் தொகையை தமிழகத்தில் 12 ஆயிரத்து 525 கிராமப் பஞ்சாயத்துகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 36 மாவட்ட ஊராட்சிகளுக்கு பகிர்ந்தளிக்க ஊரக மேம்பாட்டு ஆணையருக்கு அதிகாரம் வழங்கி அரசு உத்தரவிடுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story