56 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்


56 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்
x

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 56 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 56 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

ரேஷன் அரிசி

விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அழகாபுரி சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் தலா 50 கிலோ கொண்ட 56 மூடை ரேஷன் குருணை அரிசி இருந்தது. வேனில் இருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் குலாளர் தெருவை சேர்ந்த வேன்டிரைவர் ரமேஷ் (வயது 29), சுமை தூக்கும் தொழிலாளி ராமகிருஷ்ணன் (29) ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான மாவு மில்லில் இருந்து அரிசி மூடைகளை தேனியில் உள்ள ஹக்கீம் என்பவரது மாவு மில்லுக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சுந்தரமூர்த்தியின் மாவுமில்லில் சோதனை செய்தனர். அப்போது அங்கு மேலும் 6 மூடை தலா 40 கிலோ கொண்ட ரேஷன் அரிசியும், 11 கொட்டத்தில் குருணை அரிசியும் இருந்தது. அதையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மாவு மில் அதிபர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் சுந்தரமூர்த்தி, தேனி ஹக்கீம், ரமேஷ், ராமகிருஷ்ணன் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து ரமேசையும், ராமகிருஷ்ணனையும் கைது செய்தனர். மாவு மில் அதிபர்களை தேடி வருகின்றனர்.


Next Story