புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 5,704 மதுபாட்டில்கள் பறிமுதல்


புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 5,704 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி விற்பனைக்காக புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 5,704 மதுபாட்டில்கள் பறிமுதல் 3 வாலிபர்கள் கைது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான மதுவிலக்கு அமலாக்க பிரிவு தனிப்படை போலீசார் மலைக்கோட்டாலம் கருப்பனார் கோவில் அருகில் உள்ள காட்டுக்கொட்டாயை சோதனை செய்தனர். அப்போது அங்கு சாக்கு மூட்டைகளில் 5,704 புதுச்சேரி மதுபாட்டில்கள், 110 லிட்டர் சாராய பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

விசாரணையில் தீபாவளி பண்டிகை விற்பனைக்காக புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் சாராயத்தை கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ராவுத்தநல்லூர் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் நவீன்(வயது 27), கள்ளக்குறிச்சி கரியப்பநகரை சேர்ந்த பாரிவள்ளல் மகன் பிரபாகரன்(35), நாமக்கல் மாவட்டம் பாப்பங்காடு பகுதியை சேர்ந்த கணபதி மகன் சுரேஷ்(33) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 5,704 மதுபாட்டில்கள், 110 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story