ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பகல் பத்து 5ம் நாள் உற்சவம்...!
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவில் ஐந்தாவது நாளான இன்று மூலஸ்தானத்தில் இருந்து ஸ்ரீ நம்பெருமாள் எழுந்தருளியனார்.
திருச்சி,
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாகதசி பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று அர்ச்சுன மண்டபத்தில் பாண்டியன் கொண்டை, ரத்தின காது காப்பு, புஜ கீர்த்தி, விமான பதக்கம், ரத்தின அபயஹஸ்தம், முத்துச்சரம், அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஸ்ரீ நம்பெருமாள் காட்சியளித்தார்.
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி பெருவிழா 2022-23 கல் பத்து ஐந்தாம் திருநாள் அர்ஜுன மண்டபத்தில் இன்று நம்பெருமாள், அரங்கனையன்றி மற்று தெய்வம் அறியா தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாலை பாசுரத்திற்கு ஏற்க, ரத்தின பாண்டியன் கொண்டை அணிந்து, ஸ்ரீரங்க விமான பதக்கம் (பெரியபெருமாள், நம்பெருமாள், உபயநாச்சிமார்கள், பரவாசுதேவர், விபீஷணன், துவாரபாலகர்கள் என 8 திருமேனி பதிக்கப் பெற்றது) அடுக்கு பதக்கங்கள், சிகப்புக்கல் அபயஹஸ்தத்துடன், பச்சைவர்ண வஸ்திரம், 6 வட பெரிய முத்து சரம் சாற்றி, பின் சேவையாக - அண்டபேரண்ட பக்க்ஷிபதக்கம், புஜ கீர்த்தி கைகளில் சாற்றி, காட்சியளித்தார்.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பகல்பத்து விழாவில் திங்கள்கிழமை வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்துள்ளனா்.ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி பகல்பத்து தொடங்கி நடைபெற்று வருகிறது.