கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு5-ம் தூண் அமைப்பினர் போராட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு5-ம் தூண் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் 5-ம் தூண் அமைப்பு நிறுவன தலைவர் அ.சங்கரலிங்கம் மற்றும் நிர்வாகிகள் முற்றுகை போராட்டம் நடத்தினா். கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை கடைகள் பல சட்டப் போராட்டத்துக்கு பின் கடந்த 17-ந் தேதி இடிக்கப்பட்டன. ஆனால், வியாபாரிகளில் பெரும்பாலானோர் நகராட்சியால் ஒதுக்கப்பட்ட இடத்துக்கு செல்லாமல், அவரவர் இஷ்டம் போல் அனுமதி தராத இடங்களில் வியாபாரம் செய்கிறார்கள்.
நடைபாதைகளிலும் நடத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்துவதுடன், நகர் முழுவதும் சுகாதார கேட்டை உருவாக்குகிறது. எனவே, சேமிப்பு கிடங்குகளில் நடத்தக் கூடிய கடைகளை தடை செய்ய வேண்டும். கோவில்பட்டி நகராட்சியால் அனுமதிக்கப்படாத இடங்களில் உள்ள கடைகளை பாராபட்சமின்றி அப்புறப்படுத்த வேண்டும். நகராட்சியால் ஒதுக்கப்பட்ட இடத்துக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்.
கோவில்பட்டி நீர்வரத்து ஓடை அருகே அமைக்கப் பட்டுள்ள நடைபாதை யில் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப் பதையும், தற்காலிக கடை அமைத்து ஆக்கிரமிப்பதையும் தடுத்து அப்புறப்படுத்த வலியுறுத்தி இந்த போராட்டம்நடந்தது. பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி உதவி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.