5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல்
மேல்சாத்தமங்கலம் ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல்
திருவண்ணாமலை
சேத்துப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மேல்சாத்தமங்கலம் கிராமத்தில் 5-வது வார்டுக்கு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் 2 பேர் போட்டியிட்டனர்.
தேர்தல் அலுவலர் கே.பாஸ்கரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு சென்று பார்வையிட்டனர்.
வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டு பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பாதுகாப்பு அறையில் ஓட்டு பெட்டியை வைத்து சீல் வைத்தனர்.
அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரி, நாகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story