ராஜீவ் வழக்கில் 6 பேர் விடுதலை: புதியதோர் வாழ்வைத் தொடங்க வாழ்த்துகள் - டிடிவி தினகரன்


ராஜீவ் வழக்கில் 6 பேர் விடுதலை: புதியதோர் வாழ்வைத் தொடங்க வாழ்த்துகள் - டிடிவி தினகரன்
x

ராஜீவ் வழக்கில் நீண்ட சட்டப்போராட்டம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ராஜீவ் வழக்கில் பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து சிறையில் இருந்த 6 பேரும் இன்று சுப்ரீம் கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விடுதலையான 6 பேரும் புதியதோர் வாழ்வைத் தொடங்க வாழ்த்துகள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில்,

பேரறிவாளனைத் தொடர்ந்து எஞ்சிய 6 தமிழர்களின் நீண்ட சட்டப்போராட்டம் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது. சிறையிலிருந்து வெளிவரவிருக்கும் அவர்கள் புதியதோர் வாழ்வைத் தொடங்க வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.




Next Story