கவர்னரை கண்டித்து போராட்டம் நடத்திய 6 பேர் கைது
திருப்பூர்
தமிழ்நாடு கவர்னரை கண்டித்து உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகில் அவருடைய உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஆதித்தமிழர் பேரவையினர் அறிவித்திருந்தனர். இதனையடுத்து பஸ் நிலையம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் ஈழவேந்தன் தலைமையில் கொடியுடன் வந்த ஒரு பெண் உள்பட 6 பேர் கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும் திடீரென்று கவனர் உருவப்படத்தைக் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.
Next Story