கோவை கார் வெடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்


கோவை கார் வெடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்
x

நீதிமன்ற வளாகம் மற்றும் உள்ளே செல்லும் வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது

கோவை,

கோவை, கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23-ந் தேதி அதிகாலை 4 மணியளவில் கார் வெடித்து ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார். இந்த வழக்கில் முகமது அசாருதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமதுநவாஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 6 பேர் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் கோவை கார் வெடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.இதனால் நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் நீதிமன்ற வளாகம் மற்றும் உள்ளே செல்லும் வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது


Next Story