லாரிகளில் 6 பேட்டரிகள் திருட்டு


லாரிகளில் 6 பேட்டரிகள் திருட்டு
x

லாரிகளில் 6 பேட்டரிகள் திருட்டு

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையை அடுத்த பொன்னவராயன்கோட்டையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நவீன அரிசி ஆலை உள்ளது. இந்த ஆலையில் அரைப்பதற்காக நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரிகள் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தன. நிறுத்தப்பட்டிருந்த 3 லாரிகளில் இருந்து தலா 2 பேட்டரிகள் வீதம் 6 பேட்டரிகள் திருடப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும். இதுகுறித்து பட்டுக்கோட்டை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் போஜராஜன் பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேட்டரிகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story