ராயக்கோட்டை அருகே சரக்கு ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து..!


ராயக்கோட்டை அருகே சரக்கு ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து..!
x

ராயக்கோட்டை அருகே சரக்கு ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

ராயக்கோட்டை,

தூத்துக்குடியில் இருந்து உரம் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு சேலம், தருமபுரி வழியாக பெங்களூரு நோக்கி சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ரெயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ரெயிலின் 6 பெட்டிகள் திடீரென தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

தடம்புரண்ட ரெயில் பெட்டிகளை சரிசெய்யும் பணி அதிகாலை முதலே தொடங்கி நடைபெற்று வருகிறது. சேலம், தருமபுரி, பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து ரெயில்வே பணியாளர்கள் வரவழைக்கப்படு தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தால், சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு செல்லும் ரெயில்களும், பெங்களூருவில் இருந்து சேலம் தருமபுரி, ஓசூர் வழியாக பிற ஊர்களுக்கு செல்லும் ரெயில்களும், மாற்று பாதையில் இயக்கப்படுகின்றன. அத்துடன், 4 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சில ரெயில்கள் தருமபுரி-ஓசூர் வழித்தடத்திற்கு பதிலாக ஜோலார்பேட்டை-திருப்பத்தூர்-சேலம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.


Next Story