தெருவில் சுற்றித்திரிந்த 6 மாடுகள் பிடிக்கப்பட்டன


தெருவில் சுற்றித்திரிந்த 6 மாடுகள் பிடிக்கப்பட்டன
x

பொறையாறு பகுதியில் தெருவில் சுற்றித்திரிந்த 6 மாடுகள் பிடிக்கப்பட்டன

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் பூபதி கமலக்கண்ணன், பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல் ஆகியோர் அறிவுறுத்தலின்பேரில், பேரூராட்சிக்கு உட்பட்ட தரங்கம்பாடி, சாத்தங்குடி, பொறையாறு, எருக்கட்டாஞ்சேரி மற்றும் கைகாட்டி பகுதி, ஒழுகைமங்கலம், கீழமேட்டுப்பாளையம், நண்டலாறு, சோதனை சாவடி ஆகிய பகுதிகளில் தெருக்களில் சுற்றித்திரிந்த மாடுகள் மற்றும் கால்நடைகளை பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் சுகாதார ஆய்வாளர் இளங்கோ, இளநிலை உதவியாளர் மதியரசன், வரித்தண்டலர் கருணாநிதி, துப்புரவு மேற்பார்வையாளர் சேகர் மற்றும் பணியாளர்கள் பொறையாறு சந்தைவெளி தெருவில் போக்கு வரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சுற்றித்திரிந்த 6 மாடுகளை பிடித்து பட்டியில் அடைத்தனர். பிறகு, அந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதித்து மாடுகளை அவர்களிடம் ஒப்படைத்தனர்.


Next Story