பயனாளிகளுக்கு ரூ.6 கோடி கடனுதவி


பயனாளிகளுக்கு ரூ.6 கோடி கடனுதவி
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.6 கோடி கடனுதவிகளை கலெக்டர் லலிதா வழங்கினார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். பின்னர் அவர் தாட்கோ மானியத்துடன் ரூ.5 லட்சத்தில் விவசாய டிராக்டர், ஆட்டோ, கார் வாங்க கடன், மாவட்ட தொழில் மானியத்துடன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் நீட்ஸ் திட்டத்தின் கீழ் தொழிற்கடன் ரூ.1 கோடியே 50 லட்சம் ஆகியவற்றை வழங்கினார்.

தொடர்ந்து பிரதமர் வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் மானியத்துடன் ரு.1 கோடி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடியே 6 லட்சம் என பல்வேறு திட்டங்களின் மூலம் வங்கிகளால் 50 -க்கும் பேற்பட்ட பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.6 கோடி கடனுதவி வழங்கினார். இதில், இந்திய ரிசர்வ் வங்கியன் பொது மேலாளர் வெங்கடேசன், முன்னோடி வங்கி மாவட்ட மேலாளர் முத்துசாமி, தாட்கோ மாவட்ட மேலாளர் சுசீலா, மயிலாடுதுறை வட்டார வங்கி மேலாளர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story