ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 6-ந்தேதி விடுமுறை
திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 6-ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவதை முன்னிட்டு வரும் 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறையின்போது மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 21-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 21-ந்தேதி வழக்கம்போல் இயங்கும். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story