நெல்லையில் அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்துதப்பிய 6 சிறுவர்கள் பிடிபட்டனர்


நெல்லையில் அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்துதப்பிய 6 சிறுவர்கள் பிடிபட்டனர்
x

நெல்லையில் அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 6 சிறுவர்களை போலீசார் பிடித்தனர்.

திருநெல்வேலி

நெல்லையில் அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 6 சிறுவர்களை போலீசார் பிடித்தனர்.

தப்பி ஓட்டம்

நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே அரசினர் கூர்நோக்கு இல்லம் உள்ளது. இங்கு, போலீஸ் நிலைய வழக்குகளில் சிக்கும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அடைக்கப்படுவார்கள்.

அவ்வாறு சமீபத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 20 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு உணவு வழங்கப்பட்ட நேரத்தில் வார்டன் ராஜேந்திரனை தாக்கிவிட்டு 12 சிறுவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

அதிகாரிகள் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகள் கூர்நோக்கு இல்லத்துக்கு வந்தனர். அங்கு சூப்பிரண்டு ஜெய்சங்கர், வார்டன் ராஜேந்திரன் ஆகியோரிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவர்களை தேடி வந்தனர்.

6 சிறுவர்கள் சிக்கினர்

இந்த நிலையில் நேற்று நெல்லை தாழையூத்து பகுதியில் 1 சிறுவனும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 பேரும், தூத்துக்குடியில் 3 பேரும் என மொத்தம் 6 சிறுவர்களை போலீசார் பிடித்தனர். அவர்களை நெல்லைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து மற்ற 6 சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே சிறுவர்கள் தப்பி சென்றது தொடர்பாக அரசு கூர்நோக்கு இல்ல சூப்பிரண்டு, வார்டன் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story