ஒரே நாளில் 6 போலி டாக்டர்கள் கைது


ஒரே நாளில் 6 போலி டாக்டர்கள் கைது
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 6 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 6 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

6 போலி டாக்டர்கள் கைது

திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிக அளவில் போலி டாக்டர்கள், மருந்து கடைகள் மற்றும் வீடுகளில் மருத்துவமனை போல் கிளினிக் வைத்து ஆங்கிலவழி மருத்துவம் பார்த்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. அதைத்தொடர்ந்து மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் மாரிமுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில் 10 மருத்துவ குழுவினரும், போலீசாரும் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது திருப்பத்தூர் அருகே அங்கநாத வலசை கிராமத்தை சேர்ந்த வேலயாதம் (வயது 47), பழனி (51), ஜோலார்பேட்டை அருகே புள்ளானேரி பகுதியில் சீனிவாசன் (30) என்பவரையும், ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதியில் ஜெயபாலன் (68), கோவிந்தசாமி (47), சங்கராபுரம் பகுதியில் பார்த்தீபன் (43) ஆகிய 6 பேரையும் அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.

குண்டர் சட்டத்தில்...

கைது செய்யப்பட்ட 6 பேரும் முறையாக டாக்டருக்கு படிக்காமல் போலியாக ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஆங்கில மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கையால் பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர்கள் பலர் தங்களது கிளினிக்கை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட இணை இயக்குனர் மாரிமுத்து கூறுகையில் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் வேட்டை தொடர்ந்து நடைபெறும். யாரேனும் ஏழை, எளிய படிப்பறிவில்லாத மக்களிடம் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து உயிர் பறிக்கும் நிலையில் ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அதிரடி வேட்டை தொடர்ந்து நடைபெறும் என கூறினார்.


Next Story