விலங்கு கடித்து 6 ஆடுகள் சாவு
செண்பகராமன்புதூரில் மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் சாவு
கன்னியாகுமரி
ஆரல்வாய்மொழி,
நாகர்கோவிலை சேர்ந்தவர் நல்லதம்பி. இவருக்கு சொந்தமான இடம் செண்பகராமன்புதூரை அடுத்த வில்லுச்சேரி குளம் பகுதியில் உள்ளது. அங்கு ஆடு, மாடு வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலையில் அவர் அங்கு சென்று பார்த்தபோது 6 ஆடுகள் மர்மமான முறையில் இறந்துகிடந்தன. அனைத்து ஆடுகளின் கழுத்து பகுதியிலும் காயம் இருந்தது. மேலும் ஒரு ஆடு குடல் வெளியே சரிந்த நிலையில் செத்து கிடந்தது. ஏதோ மர்ம விலங்கு கடித்ததில் ஆடுகள் இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட வன அலுவலர் இளையராஜா உத்தரவின்பேரில் பூதப்பாண்டி வனச்சரகர் ரவீந்திரன் மற்றும் வன ஊழியர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.
Related Tags :
Next Story