லாரி மோதி 6 ஆடுகள் சாவு


லாரி மோதி 6 ஆடுகள் சாவு
x

கடையம் அருகே லாரி மோதி 6 ஆடுகள் பரிதாபமாக செத்தன.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே உள்ள துப்பாக்குடி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் அழகுமுத்து மகன் இசக்கிமுத்து. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் நேற்று காலையில் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு, மாலையில் மெயின் ரோடு வழியாக வீட்டுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி எதிர்பாராதவிதமாக ஆடுகளின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த 6 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story