ஊராட்சி தலைவருக்கு 6 கிராம் தங்கம் பரிசு வழங்கப்படும்


ஊராட்சி தலைவருக்கு 6 கிராம் தங்கம் பரிசு வழங்கப்படும்
x

ஊராட்சி தலைவருக்கு 6 கிராம் தங்கம் பரிசு வழங்கப்படும்

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் ஊராட்சி தலைவருக்கு 6 கிராம் தங்கம் பரிசு வழங்கப்படும் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

வேதாரண்யம் தாலுகா செம்போடையில் ஊராட்சி நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர் பகுதியை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் கலெக்டர் பேசுகையில்,

6 கிராம் தங்கம் பரிசு

நாகை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் சிறப்பாக செயல்படும் ஊராட்சி தலைவருக்கு 6 கிராம் தங்கம் பரிசாக வழங்கப்படும். ஊராட்சியில் ஜல்ஜீவன் மிஷன் பணிகளுக்காக ரூ.1,792 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. 15-வது நிதிக்குழு மானியம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்றார். இதில் நாகை கூடுதல் கலெக்டர் பிரிதிவிராஜ், உதவி இயக்குனர் சவுந்தர்ராஜன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் கருணாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜு, பாஸ்கர், செபஸ்தியம்மாள், அண்ணாதுரை, வெற்றி செல்வன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story