ஒன்றியக்குழு தலைவர்களுக்கு 6 புதிய வாகனங்கள்


ஒன்றியக்குழு தலைவர்களுக்கு 6 புதிய வாகனங்கள்
x

ஒன்றியக்குழு தலைவர்களுக்கு 6 புதிய வாகனங்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

திருப்பத்தூர்

சென்னை தலைமை செயலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் கலெக்டக் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களுக்கு 6 புதிய வாகனங்களை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வழங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஹரிஹரன், ஒன்றியக் குழு தலைவர்கள் விஜயா, திருமதி, சத்யா, வெண்மதி, சுரேஷ்குமார், சங்கீதா, ஒன்றியக் குழு துணை தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story