கஞ்சா விற்ற 6 பேர் கைது


கஞ்சா விற்ற 6 பேர் கைது
x

நெல்லை மாவட்டத்தில் கஞ்சா விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் போலீசார் ‌நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கீழ முன்னீர்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே காந்திநகரை சேர்ந்த செல்லதுரை (வயது 35), மருதம்நகரை சேர்ந்த முத்து செல்வம் (19), ராஜன் (19) ஆகியோர் சட்டவிரோதமாக கஞ்சாவை பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் 3 பேரையும் கைது செய்து, 30 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கங்கைகொண்டான் பகுதியைச்சேர்ந்த பேச்சிமுத்து (22), விஜய் அபினாஷ் (20), விக்னேஷ் (21) ஆகியோர் கஞ்சாவை பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. உடனே 3 பேரையும் போலீசார் கைது செய்து 150 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்‌.


Next Story