வனவிலங்குகளை வேட்டையாடிய 6 பேருக்கு அபராதம்


வனவிலங்குகளை வேட்டையாடிய 6 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

அச்சன்புதூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாடிய 6 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தென்காசி

கடையநல்லூர்:

அச்சன்புதூர் அருகே பண்பொழி பீட்டுக்கு உட்பட்ட கல்கட்டிகுளம் பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவரது உத்தரவின் பேரில் வனச்சரகர் சுரேஷ் தலைமையில் மேக்கரை பிரிவு வனவர் அம்பலவாணன், வனக்காப்பாளர்கள் முத்துச்சாமி, ராஜா, சுரேஷ், வனக்காவலர்கள் ஆனந்த், சின்னத்தம்பி, வேட்டை தடுப்பு காவலர்கள் ஆறுமுகம், சுப்புராஜ், கணேசன் ஆகியோர் அங்கு ரோந்து சென்றனர்.

அப்போது 6 பேர் வேட்டை நாய்களை வைத்து வனவிலங்குகளை வேட்டையாடியது தெரியவந்தது. இதுதொடர்பாக செங்கோட்டை தாலுகா மீனாட்சிபுரத்தை சேர்ந்த நேரு (வயது 55), மணிகண்டன் (42), நேரு மகன் ஆனந்தகுமார் (32), தேன்பொத்தையை சேர்ந்த சிவா மகன் கார்த்திக் (22) பண்பொழியைச் சேர்ந்த ஆறுமுகம் (46), செங்கோட்டை சேர்ந்த ஆறுமுகம் மகன் இசக்கிமுத்து (32) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story