வேலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு


வேலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு
x

வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கடந்த சில நாட்களாக தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில் வேலூர் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் 2 பேர் உள்பட 6 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

6 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story