சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது
மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சூதாட்டம்
மயிலாடுதுறை கூறைநாடு சின்ன எரகலித்தெருவில் பணம் வைத்து சீட்டுக்கட்டு சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள ஒரு கடையில் பணம் வைத்து சீட்டுக்கட்டுகள் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் பிடித்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த சீட்டுக்கட்டுகள் மற்றும் அவர்களிடம் இருந்த ரூ.250 பணத்தை பறிமுதல் செய்தனர்.
கைது
விசாரணையில், அவர்கள் மயிலாடுதுறை பசுபதி தெருவை சேர்ந்த நடராஜன் (வயது 60), புனுகீஸ்வரர் வடக்கு வீதியைச் சேர்ந்த முத்துக்குமாரன் (61), என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல கூறைநாடு ஆராய குளத்தின் படித்துறையில் சீட்டுக்கட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட கூறைநாடு பாசிக்காரத் தெருவைச் சேர்ந்த பாலு (50), குருக்கள் பண்டாரத்தெருவைச் சேர்ந்த சபரிநாதன் (40), கூறைநாடு அண்ணாவீதி ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த ராம்குமார் (32), கிட்டப்பா தெருவைச் சேர்ந்த கணேஷ்குமார் (53) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.