மங்கலம்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
மங்கலம்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர்
மங்கலம்பேட்டை,
மங்கலம்பேட்டை அடுத்த பள்ளிப்பட்டு காளியம்மன் கோவில் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் செந்தில்குமார் (வயது 40), சிவபெருமாள் மகன் செந்தில்குமார் (32), ஜே.ஜே. நகரை சேர்ந்த ராஜாங்கம் மகன் கணேசன் (57) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல பள்ளிப்பட்டு சுடுகாடு அருகே பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்ததாக அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் முருகன் (43), ஜெயராமன் மகன் முருகன் (47), முத்தையன் மகன் முருகன் (39) ஆகிய 3 பேரையும் மங்கலம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story