குட்கா விற்ற 6 பேர் கைது
வேலூர், காட்பாடி பகுதியில்குட்கா விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்
வேலூர், காட்பாடி பகுதியில் உள்ள பெட்டி, மளிகை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்கவும், அதில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் வேலூர் தெற்கு, தாலுகா, பாகாயம், சத்துவாச்சாரி, விரிஞ்சிபுரம், காட்பாடி போலீசார் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெட்டி, மளிகை கடைகளில் திடீரென சோதனை செய்தனர். இந்த சோதனையில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த கடைகளில் இருந்து 500 கிராம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story