சாராயம் விற்ற 6 பேர் கைது
வேதாரண்யம் தாலுகா பகுதியில் டாஸ்மாக் கடைகளின் அருகே சாராயம் விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் டாஸ்மாக் கடைகளின் அருகே சாராயம் விற்பனை செய்யப்படுவதாக நாகை போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது வேதாரண்யம் டாஸ்மாக் கடைகளின் அருகே சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த விஜயவர்மன்(வயது30), அகஸ்தியன்பள்ளியை சேர்ந்த முருகேசன்(38), ரமேஷ் (44) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் கருப்பம்புலம் டாஸ்மாக் அருகே சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த சிவானந்தம்(35), செம்போடை டாஸ்மாக் கடை அருகே சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த சேகர்(44), மேத்தா என்கிற அன்பரசன் (44) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story