கூடலூரில் வெறிநாய் கடித்து 6 பேர் காயம்


கூடலூரில் வெறிநாய் கடித்து 6 பேர் காயம்
x
தினத்தந்தி 18 July 2023 2:30 AM IST (Updated: 18 July 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் வெறிநாய் கடித்து 6 பேர் காயமடைந்தனர்.

தேனி

கூடலூரில், குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருணாநிதி காலனி பகுதியில் நேற்று காலை வெறிநாய் ஒன்று சுற்றித்திரிந்தது. அந்த நாய் சாலையில் செல்வோரை துரத்தி, துரத்தி கடித்தது. அதன்படி, நடைபயிற்சி சென்ற எல்லை தெருவை சேர்ந்த வாசகா (வயது 51), கோவிலுக்கு சென்று வந்த இடையர் தெருவை சேர்ந்த சுதா (45), பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த லால் (60), கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த ராகவன் (18), கடைக்கு சென்று வந்த கருணாநிதி காலனியை சேர்ந்த ஜஸ்வின் (8), ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த அழகர் (47) ஆகிய 6 பேரை அந்த நாய் கடித்து குதறியது. இதில், காயமடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து சிறுவன் ஜஸ்வின் மட்டும் மேல் சிகிச்சைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.

கூடலூரில் சமீப காலமாகவே தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அவற்றில் சில நாய்கள் வெறிபிடித்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story