தொழிலாளர்களை தாக்கிய 6 பேர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது


தொழிலாளர்களை தாக்கிய 6 பேர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது
x

நெல்லையில் தொழிலாளர்களை தாக்கிய 6 வாலிபர்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை,

நெல்லை தச்சநல்லூர் மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்தவர்கள் மனோஜ்குமார் (வயது 21), மாரியப்பன் (22). தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் வேலையை முடித்துவிட்டு இரவு மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் அவர்களை மிரட்டி, 2 செல்போன், ரூ.5 ஆயிரத்தை பறித்தனர். மேலும் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களிடம் இருந்து தப்பித்த 2 பேரும் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சோ்ந்தனர்.

6 பேர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் தச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் நெல்லை தாழையூத்து ராஜவல்லிபுரத்தை சேர்ந்த பொன்மணி (25), மணக்காடு பகுதியை சேர்ந்த ஆயிரம் (19), நல்லமுத்து (21), ராமர் (22), சிவா (22), லட்சுமணன் (19) ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து 6 பேரையும் கைது செய்தனர். இதற்கிடையே தாக்குதலுக்கு உள்ளான வாலிபர்களை பல்வேறு அமைப்பினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.


Next Story