ஆசிரியையிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு


ஆசிரியையிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
x

பழனியில் நடந்து சென்ற ஆசிரியையிடம் 6 பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது.

திண்டுக்கல்

பழனி நடேசன் சந்து பகுதியை சேர்ந்தவர் சேதுராமலிங்கம். அவருடைய மனைவி மாரிமுத்து (வயது 76). ஓய்வுபெற்ற ஆசிரியை. நேற்று மாலை இவர், பழனி கிழக்கு ரதவீதியில் உள்ள மருந்துகடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் மாரிமுத்துவின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்கசங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றனர்.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அந்த வாலிபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து பழனி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். பழனியில் ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் நகை பறித்து சென்ற சம்பவம் பழனியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story