பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
x

பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள தென்கரையை சேர்ந்தவர் சண்முகம்(வயது40). இவரது மனைவி பாக்கியா(33). 18 புதுக்குடி அக்ரஹாரதெருவை சேர்ந்த முருகானந்தம் மனைவி பானுமதி (30). நேற்றுமுன்தினம் இரவு இவர்கள் 4 பேரும் தங்களது மோட்டார்சைக்கிளில் கும்பகோணத்தில் இருந்து துக்காச்சி-புதுக்குடி இடையே சென்று கொண்டிருந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி பானுமதி கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து குடவாசல் போலீஸ் நிலையத்தில் பானுமதி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story