கணவனுடன் சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு


கணவனுடன் சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு
x

நாட்டறம்பள்ளி அருகே கணவனுடன் சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகையைபறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளியை அடுத்த ஜங்களாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவரது மனைவி உதயமலர் (வயது 34). இவர்கள் சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் ஜங்களாபுரம் அருகே உள்ள அதிபெரமனூர் பகுதியில் நடைபெற்ற நாட்டியாலயா நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சென்றனர். சமையனூர் அருகே சென்ற போது எதிரே மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர், ஆறுமுகத்தின் மோட்டார் சைக்கிளில் மோதுவது போல் வந்துள்ளனர்.

அப்போது திடீரென உதயமலர் கழத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உதயமலர் கூச்சல் போடவே நகையை பறித்த 2 பேர் மின்னல் வேகத்தில் நகையுடன் தப்பிசென்றனர். இது குறித்து உதயமலர் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story