வீடு புகுந்து பெண்ணிடம் 6½ பவுன் நகை பறிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடு புகுந்து பெண்ணிடம் 6½ பவுன் நகையை பறித்து சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடு புகுந்து பெண்ணிடம் 6½ பவுன் நகையை பறித்து சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகைபறிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணபுரத்தில் பழக்கடை வைத்திருப்பவர் பாலாஜி. இவரது தாய் கனகேஸ்வரி (வயது44). இவரது வீடும், கடையும் அருகருகே உள்ளது. இந்தநிலையில் வழக்கம் போல் பாலாஜி கடைக்கு சென்று விட்டார். கனகேஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது வீட்டிற்குள் புகுந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி கனகேஸ்வரி அணிந்திந்த 6½ பவுன் செயினை பறித்தனர். இதற்கிடையே கனகேஸ்வரி, பாலாஜிக்கு போன் செய்து உடனே வா என கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
2 பேருக்கு வலைவீச்சு
இதனால் பதறிய படி பாலாஜி வீட்டிற்குள் வந்தார். அப்போது முகமூடி அணிந்து கொண்டு வெளியே ஓடி வந்த 2 பேர் பாலாஜியை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசில் பாலாஜி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கப்பதிவு செய்து முகமூடி அணிந்து கொள்ளையடித்த நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.