புகழூரில் 6 அடிநீள பாம்பு பிடிபட்டது


புகழூரில் 6 அடிநீள பாம்பு பிடிபட்டது
x

புகழூரில் 6 அடிநீள பாம்பு பிடிபட்டுள்ளது.

கரூர்

புகழூர் நகராட்சி ராம்நகர் பகுதியில் சுற்றுவட்டார பகுதி பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் உள்ள கேட் வாழ்வு திறக்கப்பட்டு குழாய் வழியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக கேட் வாழ்வை ஊழியர் திறக்க சென்றுள்ளார். அப்போது அந்த கேட்வால்வில் 6 அடி நீளம் உள்ள நாகபாம்பு இருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அங்கிருந்த 6 அடிநீள நாகபாம்பை பாம்பு பிடிக்கும் குச்சியில் லாவகமாக பிடித்து சென்று, வனப்பகுதியில் விட்டனர்.


Next Story