தூத்துக்குடி வட்டாரத்தில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த 6 கிராமங்கள் தேர்வு
தூத்துக்குடி வட்டாரத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த 6 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
சாயர்புரம்:
தூத்துக்குடி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகளை செயல்படுத்த தூத்துக்குடி வட்டாரத்தில் 6 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ள தெற்கு சிலுக்கன்பட்டி, மேல தட்டப்பாறை, கீழ தட்டாபாறை, தளவாய்புரம், வடக்கு சிலுக்கன்பட்டி, குமாரகிரி ஆகிய பஞ்சாயத்து பகுதியில் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் ஜெய செல்வின் இன்பராஜ் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரகலா, துணை வேளாண்மை அலுவலர் ஆனந்தன், உதவி வேளாண்மை அலுவலர் வடக்குவாச்செல்வி, தமிழ்ச்செல்வன், மணிகண்டன், மீனாட்சி, உதவி தோட்டக்கலை அலுவலர் கந்தையா, பிரியா, வெடியப்பன், உதவி தொழில்நுட்ப மேலாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story